Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நலன்புரி நிலையங்களின் எண்ணிக்கை 225ஆக அதிகரித்துள்ள நிலையில், 32,641 குடும்பங்களைச் சேர்ந்த 122,047 பேர் இடம்பெயர்ந்து இவ் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 59,532 குடும்பங்களைச் சேர்ந்த 235,349 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென்னெருவில்பற்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், மண்முனைப்பற்று பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணமல் போயுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3944 குடும்பங்களைச் சேர்ந்த 14,136 பேரினது விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளன. 1220 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 8450 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 51,179 குடும்பங்களைச் சேர்ந்த 186,241 பேர் வாழ்வாதார தொழில்களை இழந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .