2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

உன்னிச்சை மக்களுக்கு 23 மில்லியன் கடனுதவியை மத்தியவங்கி ஆளுநர் வழங்கினார்.

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி அஜித் நிவாட் கப்ரால், யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களைக் கொண்ட உன்னிச்சைப் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பன இணந்து வழங்கிய  23 மில்லியன் ரூபாய் கடன் திட்ட நிதியினை 614 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தார்.

பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மத்திய வங்கி ஆகியவற்றின்
உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆடு, மாடு வளர்ப்பிற்கான கால்நடைகளும் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--