2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

25 வீடுகளுக்கு இலவச குழாய்க்கிணறுகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, கல்லடி ஆகிய பிரதேசங்களில்  வறுமைக் கோட்டிற்கு  கீழுள்ள 25 தமிழ் மற்றும்  முஸ்லிம் குடும்பங்களின் வீடுகளில் இலவசமாக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள குழாய்க்கிணறுகளை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ஜனாபா சல்மா ஹம்சா புதன்கிழமை (09)  சென்று பார்வையிட்டார்.

ஜனாபா சல்மா ஹம்சாவின் வேண்டுகோளுக்கமைய, அல் ஹிம்மா நிறுவனத்தினால் கடந்த 02 வாரங்களாக இக்குழாய்க்கிணறுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. 

காத்தான்குடி மற்றும் கல்லடி பிரதேசங்களில்  25 வீடுகளில் 25 குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொன்றும் 15,000 ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்  ஜனாபா சல்மா ஹம்சா தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--