Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாநகர சபையில் மாநகர முதல்வரினால் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2011ஆம் ஆண்டிக்கான வரவு செலவு திட்டம் வரி செலுத்தும் மக்களுக்கு ஒரளவேனும் நன்;மையளிக்கும் வகையில் அமைந்தால் மாத்திரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் ஏழு கோடியே எழுபத்தி ஜந்து லட்சம் (7.75.00000) ரூபா நிதியில் 60 வீதம் மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என மாநகர சபையின் கட்டளைச் சட்டம் தெரிவிக்கின்றது.
ஆனால், இன்று அதிகரித்து காணப்படும் மாநகர சபையின் செலவீனங்களுக்கு எதிர் பார்க்கப்படும் நிதியிலிருந்து 90 வீதத்திற்கும் மேலான தொகையினை நிருவாகச் செலவினங்களுக்கு இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
மாநகர சபையின் பகுதிக்குள்; அதிகமான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது. அதிகளவிலான வீதிகளும், வடிகால்களும் திருத்தியமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறே கடந்த 2010ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமும் எதிர்பார்க்கப்பட்ட நிதியிலிருந்து 90 வீதத்திற்கும் அதிகமான தொகையினை நிர்வாக செலவினத்திற்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது அதனால் மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அவர்களது அத்திய அவசியத் தேவைகளை 10 வீதமேனும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
எனவே மக்களின் நலனில் அக்கறை செலுத்தி குறைந்தது 30 வீதமேனும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2011ஆம் ஆண்டிக்கான வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025