Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்கென மட்டக்களப்பு, நொச்சிமுனைக் கிராமத்தில் தமிழர் புனர்வாழவுக் கழகம் அமைத்துக் கொடுத்துள்ள வீடமைப்புத் தொகுதியில் சுமார் 30 வீடுகள் குடியிருப்பாளர்கள் இன்றி பாழடைந்து காணப்பகின்றன.
அத்துடன், பல வீடுகள் திருடர்களால் உடைக்கப்பட்டு பொருட்கள் மற்றும வீட்டுத் தளபாடங்கள் என்பனவும களவாடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 வீடுகளைக் கொண்ட இந்த வீடமைப்புத் தொகுதியில் வீடுகளை, குறித்த நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவில்லை என்றும் வசதியானவர்களுக்கு வீடுகளை வழங்கியதால் அவர்கள் குறித்த வீடுகளில் குடியிருக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.
இதனால் குறிப்பிட்ட 30 வீடுகளும் மூடப்பட்ட நிலையில் பாழடைந்து வருகின்றன. சுனாமி தாக்கத்தால் வீடுகளை இழந்த எத்தனையோ குடும்பங்கள் வீடுகள் இன்றி தவிக்கின்றபோதும் இவ்வாறு வீடுகள் மூடப்பட்ட நிலையில் பாழடைவது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .