2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாவட்டத்தின் 35 இடங்களில் 16 மணித்தியால மின் வெட்டு

Super User   / 2012 நவம்பர் 20 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மின்சார சபையின் பராமரிப்பு பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 35 இடங்களில் 16 மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என மட்டு. மாவட்ட மின் அத்தியட்சகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி வரையே இந்த மின்வெடடு அமுல்படுத்தபபடவுள்ளது.

மண்டூர், வெல்லாவெளி, கோயில் போரதீவு, பொறுகாமம், பழுகாமம், முனைக்காடு, முதலைக்குடா கொக்ககட்டிச்சோலை, திக்கோடை அரசடித்தீவு, தும்பங்கேணி தாந்தாமலை, அம்பிளாந்துறை, எருவில் குறுமன்வெளி, பெரியகல்லாறு கோட்டை கல்லாறு, களுவாஞ்சிக்குடி களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிப்பாளையம், மாங்காடு, குருக்கல்மடம் கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, மண்முனை, ஆரையம்பதி, காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா நொச்சிமுனை, கல்லடி திருச்செந்தூர், புது முகத்துவாரம் மற்றும் நாவலடி ஆகிய இடங்களிலேயே இந்த மின் தடை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .