2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

38 கையடக்கத்தொலைபேசி பற்றரிகளுடன் ஒருவர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், ஐதுசன், ஆர்.அனுருத்தன்)

நீணட நாட்களாய் கையடக்கத் தொலைபேசிகளையும், அதன் பற்றரிகளையும் கொள்ளையிட்டு வந்த ஒருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.மானவடு தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள வர்த்தக நிலையங்களில் இவற்றை குறித்த சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த நபரிடமிருந்து 38 பற்றரிகளையும், ஒரு கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--