2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் 4 கடைகளில் திருட்டு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், ஸரீபா)

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதிக் கடைத் தொகுதியிலுள்ள நான்கு கடைகளில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.  

மொத்த வியாபார பல சரக்குக்கடையொன்றும் மினி கோப்சிட்டியொன்றும் புடவைக்கடை, இரும்புக்கடை ஆகிய கடைகளிலேயே நேற்று புதன்கிழமை இரவு இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இக்கடைக் கதவுகளின் பூட்டுக்கள் உடைத்து பொருட்கள் சிலவற்றை திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இக்கடைகளில் திருட்டுப்போன 3 கடைகளினுடைய பொருட்களின் பெறுமதி  மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக  வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். பலசரக்குக் கடையிலிருந்து 30,000 ரூபாய் பணம் உள்ளடங்கலாக பொருட்களும், புடவைக்கடையிலிருந்து 3,500 ரூபாய் பணத்துடன், 21,000.00 ரூபாய் பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர்கள்  வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ்.வீதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள் விற்கும் கடையிலிருந்து 12000.00 பணம் கொள்ளையிடப்பட்டதாக அக்கடை உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .