2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

40 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மிச்நகர் மற்றும் தாமரைக்கேணி கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  40 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு  வாழ்வாதாரத் தொழிலுக்கான உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை (01) வழங்கப்பட்டன.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நீடித்து நிலைக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் 25,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

பன்புல் பாய் உற்பத்தி, கோழி வளர்ப்பு, சிறுகடை, வீட்டுத் தோட்டம்;, உணவுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களைச் செய்ய முன்வந்த குடும்பத் தலைவிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியதாக  முஸ்லிம் எய்ட்; நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவன மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் தலைமை நிகழ்ச்சித்திட்ட அதிகாரி பாஹிம் வகாப், சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி  பஸ்லான் தாஸிம்,  திட்டத் தொடர்பாடல் உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அமீர்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .