Super User / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மீன்பிடி வலைகளை பாவித்த காரணத்திற்காக இவ்வருட ஜனவரி முதல் இன்றுவரை 43 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மீன் பிடித்துறை உதவிப் பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
கடலில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பாவிப்பதால் கரைவலை மீன்பிடிதொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சுமார் 7,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வாவியில் தடை செய்யப்டப்ட தங்கூசி வலை, முக்கூட்டு வலை, மற்றும் 2.5 அங்குலத்திற்கும் குறைவான வலை ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் சுமார் 12,000 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
வாவியில் குறிப்பிட்ட வலைகளை பாவிப்பதால் 112 மீன் இனங்களில் 28 வகையான மீன் இனங்கள் அருகிவிட்டதாகவும் கவலை வெளியிட்டார்.
"கடந்த 2008ஆம் ஆண்டு சட்டவிரோத மீன் பிடி வலைகளை பாவித்த குற்றத்திற்காக 21 பேருக்கும், 2009ஆம் ஆண்டு 34 பேருக்கு எதிராகவும் இவ்வாண்டு இதுவரை 43 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு மீன்பிடி வலைகளும் எரிக்கப்பட்டு வள்ளங்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்டப்டன.
கடந்த காலங்களில் இம்மாவட்டத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடை செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது.
ஆனால் தற்போது சிவில் நிர்வாகம் முழுமையாக அமுலுக்கு வந்துள்ளதால் பொலிஸாரின் உதவியுடன் இந்த ஆண்டிற்குள் இதனை முற்றாக தடுக்க முடியும்.
இம்மாவட்டத்தில் வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை பிரதேசங்களில் சட்டவிரோத மீன்பிடி வலை பாவிப்பது முற்றாக தடை செய்யப்டப்டுள்ளது " என்றார்.
19 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago