2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட 480ஏக்கர் வயல் நிலங்கள்; விவசாயிகள் முறைப்பாடு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சக்திவேல்)

ஏறாவூர்பற்று பிதேச சபைக்குட்பட்ட 480 ஏக்கர் வயல் நிலங்கள் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் அவ்வயல் நிலங்களில் நெற்செய்கை மேற்கொண்டுவந்த பெரும்பாலான விவசாயிகள் தமது வாழ்வாதாரம் பறிபோயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இந்த விடையத்தினை இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற மாவட்ட அபிவருத்திக் குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் விவசாயிகளின் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்கு மீட்டுக்கொடுக்கவேண்டும் எனவும் கட்சி பேதமற்ற அரசியல் வாதிகள் ஆதரவு தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குறித்த விடையத்தினை எதிர்வரும் 17ஆம் திகதி ஏறாவூர்பற்று பிதேச செயலகத்தில் மாகாணசபை அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இந்த விடயம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர்பற்று பிதேச சபைக்குட்பட்ட மரப்பாலம் - பீ.வலயம், வீரக்கல், பொத்தானை ஆகிய இடங்களிலுள்ள வயல் நிலங்களே மேச்சல் தரைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .