2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

50 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு பிரதேசங்களில் 25 குளங்கள் புனரமைப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கமநல அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் 25 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் கலாநிதி ஆர்.ருஷாங்கன் தெரிவித்துள்ளார்.

சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் இக்குளங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றன. கிரான், வந்தாறுமூலை, கரடியனாறு, பெரியபுல்லுமலை, ஈரக்குளம் ஆகிய இடங்களிலேயே இக்குளங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இக்குளங்களிலிருந்து பெறப்படும் நீரினால் சகல போகங்களுக்குமான நீர்ப்பாசன வசதியை பெறமுடியும். மொத்தமாக இதன்மூலம் சுமார் 2,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீப்பாசனத்தைப் பெறமுடியுமெனவும் டொக்டர் ருஷாங்கன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--