2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நாளொன்றுக்கு ரூ.5000 வருமானம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட மண்முனைப்பாலத்தினூடாக கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்புக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டியானது நாளொன்றுக்கு ரூ.5000 வருமானம் ஈட்டப்படுவதாக கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ருத்திரமூர்த்தி யுவநாதன் புதன்கிழமை (23) தெரிவித்தார்.

சனிக்கிழமை (19) மண்முனைப்பாலம் திறக்கப்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (20) தொடக்கம் கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்புக்கு தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடத்தொடங்கின.

கொக்கட்டிச்சோலைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் எட்டு தனியார் பஸ் வண்டிகள் காலை 5.50 மணி தொடக்கம் மாலை 6.40 மணிவரை பாலத்தினூடாக சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

ஓவ்வொரு அரை மணித்தியாலயங்களுக்கு ஒரு முறை கொக்கட்டிச்சோலையிலிருந்தும் அதே போன்று மட்டக்களப்பிலிருந்தும் தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதே போன்று கொக்கட்டிச்சோலையிலிருந்து தினமும் இரவு 8.40 மணிக்கு கொழும்புக்கான தனியார் பஸ் வண்டியொன்றும் சேவையிலீடு படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.

இது தவிர இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ் வண்டிகள் கொக்கட்டிச்சோலைக்கும்  மட்டக்களப்புக்கு மிடையில் சேவையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--