2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 842 புதிய மாணவர்கள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர். அனுருத்தன்)

கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வியாண்டில் 842 மாணவர்களை அனுமதிக்க பல்கலைகழகங்களின் மானிய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதில்  458 சிங்கள மாணவர்களும் உள்ளடங்குவர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வியாண்டில் தெரிவாகியுள்ள மாணவர்கள் விவரம் பாடரீதியாக பின்வருமாறு அமைவதாக கிழக்கு பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்:

தாதிகள் பட்டப்படிப்பு 50 பேர், உயிரியல் 273 பேர், பௌதீகவியல் 336,  விவசாயம் 238, வர்த்தகம் 130, வைத்தியம் 50, கலை 108, முகமைத்துவம் 103. தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழகத்தில் பதிவுகளை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை 575 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.  கலைப்பீடம் தவிர்த்த ஏனைய அனைத்து பீடங்களிலும் சிங்கள மாணவர்கள் அனுமதிக்காகத் தெரிவாகியுள்ளார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X