Suganthini Ratnam / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்,ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமரும் மதவிவகார புத்தசாசன அமைச்சருமான டி.எம்.ஜயரட்ன இன்று முற்பகல் கல்லடியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழக அழகியற் கற்கைகள் நிலையத்தில் இந்துமத ஆலய அறங்காவலர்கள், இந்து மதகுருமார்கள், மதத்தலைவர்களை சந்தித்ததுடன் இந்துமத மேம்பாட்டிற்கான நிதியுதவியினையும் வழங்கினார்.
சுமார் 87 ஆலயங்களுக்கு இதன்போது காசோலைகள் வழங்கப்பட்டன. இங்கு வருகை தந்த பிரதமருக்கு தமிழ் கலாசார முறைப்படி மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அத்துடன் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
இந்துமத வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான மகஜரும் இதன்போது பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
15 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
43 minute ago
2 hours ago