Super User / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2011ஆம் ஆண்டுக்காக 31.27 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன் மற்றும் சி.யோகேஸ்பரன் ஆகிய மூவரும் தலா ஐந்து மில்லியன் ரூபாய்களையும் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவூத் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தலா ஐந்து மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதேவேளை, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திஸ்ஸநாயக்க 875,000 ரூபாவினையும், டி.எம்.சுவாமிநாதன் 300,000 ரூபாவினையும், ஏ.எச்.எம்.அஸ்வர் 50,000 ரூபாவினையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதியொதுக்கீடு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 412 திட்டங்களுக்காக இந்நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
meenavan Thursday, 22 September 2011 11:05 PM
மட்டகளப்பு மாவட்ட எம்.பி.களுக்கு அப்பகுதி மக்களின் மீதுள்ள அக்கறையின் வெளிப்பாடு? வாழ்த்துகள். அம்பாறை மாவட்ட எம்.பி.களது நிலை என்ன? நிதி கிடைக்கவில்லையோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago