2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி நியாய விலையில் வழங்க நடவடிக்கை

கனகராசா சரவணன்   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக, அத்தியவசியப் பொருள்களை தட்டுப்பாடின்றி நியாய விலையில் மக்களுக்கு வழங்க, அத்தியாவசிய பொருள்கள் நேற்று (24) கொண்டு வரப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கான நடவடிக்கைக்கு அமைய, அரிசி, சீனி, பருப்பு, கடலை, கோதுமை மா, டின்மீன், பயறு, பெரிய வெங்காயம் போன்ற பொருள்கள்​ கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்லாறு, வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர் வடக்கு-தெற்கு, செங்கலடி, மட்டக்களப்பு, ஈச்சந்தீவு - கன்னங்குடா, அரசடித்தீவு, களுவாஞ்சிக்குடி, ஆரையமம்பதி, பழுகாமம் ஆகிய 16 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளன

இதேவேளை, பருப்பு ஒரு கிலோகிராம் 65 ரூபாய்க்கும் டின்மீன் 100 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒருகிலோகிராம் 120 ரூபாய்க்கும் என, கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு வீடுவீடாக நடமாடும் சேவை மூலமாக பொருள்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .