2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

ஆதரவாளர்களுக்கிடையே மோதல்

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா பேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக,  ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, ஒரு தரப்பினரின் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  மற்றைய அணியினரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், 08 பேர் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் பற்றித் தெரியவருவதாவது, ஒரு குழுவினர் வேட்பாளர் ஒருவரது சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, மற்றைய வேட்பாளரது ஆதரவாளர்கள், வான் ஒன்றில் வந்து அவற்றைக் கிழித்தெறிந்த போது அந்த வாகனத்தின் மீது கல் வீசப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று (31) அதிகாலை 12.30 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், வேட்பாளரது ஆதரவாளரின் வீட்டின்மீது பெற்றோல் குண்டான்றை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதனால் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்துள்ளது.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஏறாவூப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--