Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஏப்ரல் குண்டுவெடிப்பின்போது, உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஆற்றுப்படுத்தும் உதவித் திட்டத்தின் கீழ், கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு உளநலச் சமூக ஒன்றியத்தின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமாரின் பரிந்துரைக்கமைய, 75 சிறார்கக்கு இவ்வாறாக கற்றலுக்கும் பொழுதுபோக்குக்குமாக உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின்போது, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மனநல ஒருங்கிணைப்பு வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன், மாவட்ட உளவள துணை அதிகாரி கே. மதிவண்ணன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ. குகதாஸன். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
18 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago