Editorial / 2020 மே 03 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எஸ்.சபேசன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, கசிப்புத் தயாரிப்பு - விற்பனை, கஞ்சா, ஹெரோய்ன் போதைப்பொருள் பாவனை, மணல் அகழ்வு, மரக் கடத்தல், கால்நடைகள் கடத்தல், திருட்டுகள் என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கும் பொலிஸார், அவற்றைத் தடுக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய, கசிப்பு, கஞ்சா, ஹெரோய்னுடன், வெள்ளிக்கிழமை (01) காலை 6 மணி தொடக்கம் நேற்று (02) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளில், ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 21 பேரையும் கசிப்புடன் 8 பேரையும், கஞ்சா, ஹெரோய்னுடன் மூவரையும் இவ்வாறு கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அந்தந்தப் பொலிஸ் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சிலரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
16 minute ago
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
3 hours ago