ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள சர்வதேச கரையோரம் தூய்மைப்படுத்தல் தினத்தையொட்டி, இலங்கையில் கரையோரம் தூய்மைப்படுத்தல், கரையோர வளங்களைப் பாதுகாத்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
இவ்வாரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரையோர வளங்களைப் பாதுகாத்து, தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை, மாவட்டக் கரையோரம் பேணல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், உல்லாசப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் கல்லடி கடற்கரை, இன்று (22) காலை தூய்மைப்படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு பிரதேச செயலகம், இலங்கை கடற்படை, கரையோரம் பேணல் திணைக்களம் என்பன இணைந்து, இக்கடற்கரை பிரதேசத்தில் பிளாஸ்டிக், பொலித்தீன் பொருள்களை முற்றாக அழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தன.
பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், கரையோரம் பேணல் திணைக்களக் பணிப்பாளர் எஸ்.கோகுலதீபன் உட்பட கடற்படையினரும் இவ்வேலைத்திட்டத்தில் இணைந்திருந்தனர்.
5 minute ago
9 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
17 minute ago