2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

செங்கலடி பிரதேச சபையை த.தே.கூ கைப்பற்றியது

Princiya Dixci   / 2021 ஜனவரி 18 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், க.விஜயரெத்தினம்

ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக சி.சர்வானந்தம், இன்று (18) தெரிவு செய்யப்பட்டு, குறித்த பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

2018ஆம் ஆண்டு பிரதேச சபை வட்டார தேர்தலில் வெற்றி பெற்ற 31 உறுப்பினர்களுடன், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அ.பேரின்பம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைத் தவிசாளரானார்.

அதன்பின்னர், கடந்த 3 வருடங்கள் சுதந்திர கட்சியின் ஆட்சியிலிருந்த நிலையில், 2021 நிதியறிக்கையின் பின் புதிய தவிசாளருக்காக இரண்டு கட்சி உறுப்பினர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 11 வாக்குகளை பெற்று தோல்வியடைந்ததுள்ளது. அத்துடன் 2 வாக்குகள் நடுநிலை வாக்குகளாக அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சி.சர்வானந்தம், செங்கலடி பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சபைச் செயலாளர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .