2021 மார்ச் 03, புதன்கிழமை

ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் வாக்களிப்பு

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைள் இடம்பெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான எம்.எல்.என்.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி மில்லத் மகளிர் கல்லூரியில் இன்று (16) காலை தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 பேர் (398,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில், கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 பேரும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 187,672 பேரும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 94,648 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .