2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

ஜோசப் பரராசசிங்கத்தின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரர் ஜோசப் பரராசசிங்கத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, மட்டக்களப்பு ரயில் நிலைய வீதி, கூட்டுறவு மண்டபத்தில் நாளை (25) பிற்பகல்  02 மணியளவில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவர் லோ.திபாகரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, த.கனகசபை, மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, அகவணக்கம், மலரஞ்சலி, ஈகைச்சுடரேற்றல், நினைவுப்பேரூரை என்பன நடைபெறவுள்ளன.

2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் திகதி, நத்தார் நள்ளிரவு ஆதாரனை இடம்பெற்ற வேளையில், மட்டக்களப்பு தேவாலயத்தில் ​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஜோசப் பரராசசிங்கம் உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X