2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான வாகனம் விபத்து

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு - திருமலை நெடுஞ்சாலையில் சந்திவெளிப் பிரதேசத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான வாகனமொன்று, நேற்று திங்கட்கிழமை (23) இரவு விபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிந்தக பீடிஸ் தெரிவித்தனர்.
 
இவ்விபத்தையடுத்து குறித்த வாகன சாரதி தலைமறைவாகியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 
 
இந்த் வாகனம் வீதியோரமிருந்த மதகு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
 
வாகனத்தை மீட்டு வந்துள்ள பொலிஸார், சாரதியைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .