2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

‘பௌத்த தேசியவாதத்தை பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை முடக்கும்’

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஜனாதிபதி பரப்ப முற்படுவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாதென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பேணுவது தொடர்பிலும் நிர்வாகத் துறைகள், இராணுவ மயமாக்கல் தொடர்பில் மறுபரிசீலனைகளைச் செய்ய வேண்டுமென்றும், அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு - நல்லையா வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அரசாங்கம் தமது பலத்தைக் கூடுதலாகப் பிரயோகிக்கும் என்ற நிலைமை தற்போது உள்ளது. சர்வதேச கண்காணிப்புக் குழுக்களின் மேற்பார்வையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அது, ஜனநாயகத் தேர்தலாக இருக்கும். இந்த விடயத்தில் அரசாங்கம் இன்னும் சரியான கரிசனை காட்டவில்லை” என்றார்.

“நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் உரிமை வழங்கக்கூடிய விதத்தில், நாட்டின் அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும். ஜனாதிபதியும் அவருடைய கட்சியும், அதற்கான நடவடிக்கைகனை முன்னெடுக்க வேண்டும்” என்றும், துரைராசசிங்கம் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .