2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதார மத்திய நிலையத்தைக் கையளிக்கவும்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வ.சக்தி

மட்டக்களப்பு - களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை, நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் திறந்துவைத்து, அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டுமென, அப்பகுதிவாழ் விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம், கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ.ஹரிசன் உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, 22.07.2017 அன்று அடிக்கல் நடப்பட்டு, தற்போது அதன் நிர்மாணப் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், இதுவரையில் அதனைத் திறந்து, மக்களிடம் கையளிக்கப்படமலுள்ளது.

மிளகாய், கத்தரி, வெண்டி, வெங்காயம், வெற்றிலை, பயற்றை உள்ளிட்ட பல மேட்டுநிலப் பயிற் செய்கைகக்குப் பெயர்போன அப்பிரதேசத்தின் மத்தியில் மத்திய அரசின் 300 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தைத் திறந்துவைக்கும் பட்சத்தில், தமது உற்பத்திகளை மிகவும் நியாயமான விலையில் விற்கவும், வாங்கவும், ஏதுவாக அமையுமென, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  

இப்பொருளாதார மத்திய நிலையத்தை விரைவில் திறந்து வைத்து இப்பகுதி விவசாயிகளின் பொருளாதாரத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர சம்மந்தப்பட்டவர்கள் துரிதகதியில் முன்வரவேண்டும் என, அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X