2020 நவம்பர் 28, சனிக்கிழமை

‘மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணத்தை துரிதப்படுத்துக’

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கொரோனா வைரஸால் பாதிக்க ப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு, நிவாரணம் வழங்குவதைத் துரிதப்படுத்துமாறு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது விடயமாக, அவர் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;  கொரோனா வைரஸின் தாக்கம், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தையும் பீடித்துள்ளது. அதனால் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த ப்பட்டு உள்ளார்கள். 

குடும்பத்தின் பிரதான உழைப்பாளிகளை முடங்கச் செய்துள்ள இந்த நெருக்கடி நிலைமையால், பல குடும்பங்களின் நாளாந்த வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, நாட்டின் தலைநகரிலும் அதனை அண்டிய கொரோனா வைரஸ் பரவலுள்ள கொத்தணி இடங்களிலும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கும் நிவாரணங்களைப் போன்று, மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிப்புரைகளை அரசாங்கம் விடுக்க வேண்டும். இந்த நிவாரணங்கள் துரிதமாக மக்களைச் சென்றடைய வேண்டும் என, அவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--