2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு வரலாறுகள் ஆவணப்படுத்தப்படுகின்றன

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில், எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி, மரபுரிமை ஆவணங்களை டிஜிட்டல் நவீன தொழில்நுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை, மட்டக்களப்பு மாவட்டச் செயலக நூலகம் பௌண்டேஷன் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையில் மேற்கொண்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட கலாசாரக் கூடத்தில், கொலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள், பண்டைய தொன்மை ஆவணங்கள், மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்விதம் ஆவணம் செய்யப்பட்ட பிரதிகள், இன்று (25) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டன.

நூலகம் பௌண்டேஷன் நிறுவனத்தின் மட்டக்களப்புக் கிளைப் பணிப்பாளர் சொக்கலிங்கம் பிரசாத் இதனைக் கையளித்தார்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் கலாமதி, “எதிர்கால சந்ததியினர் எமது பண்டைய காலத்து வரலாறுகளை அறிந்துகொள்வதற்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளது.

“இதனைச் செயல்படுத்த முன்வந்த ஆர்வலர்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி செய்பவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

“நமது கலாசார முறைகள் ஏனைய ஆக்கங்கங்கள் டிஜிட்டல் கட்டமைப்பில் ஆவணப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .