2020 ஜூன் 07, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட பெரும்போகப் பயிர்ச்செய்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2019/2020ஆம் ஆண்டுக்கான பெரும்போகப் பயிர்ச்செய்கை 1,80,000 ஏக்கரில் செய்கை பண்ணப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பீ.இக்பால் தெரிவித்தார்.

இதன்படி உன்னிச்சை, உறுகாமம், கித்துள்வெவ, வெலிக்காகண்டி, நவகிரி, தும்பங்கேணி, கடுக்காமுனை, புழுகுணாவி, அடைச்சகல், கட்டுமுறிவு, மதுரங்கேணி, கிரிமிச்சை, வாகனேரி, புனானை, தரவை, வடமுனை ஆகிய நீர்ப்பாசனத் திட்டத்தைப் பயன்படுத்தி பெரும்போகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாண்டுக்கான பெரும்போக நெற்பயிற் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், மட்டக்களப்பு – கிரான், ரெஜி கலாசார மண்டபத்தில், உதவி அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந்தா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஒக்டோபர் 10ஆம் திகதியிலிருந்து நவம்பர் 10ஆம் திகதிக்குள் விதைப்பு முடிவடைய வேண்டுமென்றும் இம்மாதம் 20ஆம் திகதிக்குள் கால்நடைகளை உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X