2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

முதன்முறையாக தும்பை அறுவடை

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான சௌபாக்கியா வேலைத்திட்டத்தின்கீழ், முதன்முறையாக மட்டக்களப்பு - காத்தான்குடியில் செய்கை பண்ணப்பட்ட தும்பைக்காய் அறுவடை விழா, மட்டக்களப்பு காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவில், இன்று (29) நடைபெற்றது.

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி 01 றிஸ்வி நகர் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள எ.பி.எம்.மொய்தீன், வீட்டு தோட்டத்தில் பயிர் செய்யப்பட்ட முன்மாதிரி பயிர்ச் செய்கையான தும்பை செய்கையே அறுவடை செய்யப்பட்டது.

காத்தான்குடி விவசாயப் போதனாசிரியர் முபீதா றமீஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அறுவடை நிகழ்வில், மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி வலயம் உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் உள்ளிட்ட பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .