Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 11 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்குப் பல்கலைக்கழக விவசாய மற்றும் விஞ்ஞானபீட (2014ஃ2015) மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 14.03.2016 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2014ஃ2015 கல்வி ஆண்டிற்காக பதிவு செய்யுமாறு கோரப்பட்ட விவசாய மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களின் பதிவே பின்னர் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தினத்தில் (14) விஞ்ஞான மற்றும் விவசாயபீட மாணவர்கள் வருகை தர வேண்டாம் என்று பதிவாளர் கேட்டுள்ளார்.
அதேநேரம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலை கலாசார பீட மாணவர்கள் பதிவு நடவடிக்கைகள் திட்டமிட்டபடி 13.03.2016 இல் நடைபெறுமெனவும் கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.
36 minute ago
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago