2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிமனையினை நவம்பர் 12இல் திறப்பு

Super User   / 2010 நவம்பர் 06 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ் வதனகுமார்)

மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் உள்ள 63 பாடசாலைகளை இணைத்ததாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிமனையினை கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் நவம்பர் 12ஆம் திகதி உத்தியபூர்வமாக குறிஞ்சாமுனையில் திறந்து வைக்கவுள்ளார்.

படுவான்கரைக்கான தனிக்கல்வி வலயம் அமைப்பது தொடர்பான அமைச்சரவை அங்கீகாரம் 2009 நவம்பர் மாதம் பெறப்பட்டிருந்தது.

இந்த கல்வி வலயத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு முதலமைச்சர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.நிசாமுக்கு உத்தரவிட்டதுடன் உடனடியாக திறப்பு விழாவிற்குரிய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .