2021 மார்ச் 01, திங்கட்கிழமை

13,568 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 17 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக 4,944 விவசாயிகளின் 13,568.75 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிப் பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், களுவாஞ்சிக்குடி கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 158 விவசாயிகளின் 308 ஏக்கர் வயல்களும், கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 443 விவசாயிகளின் 1,400.5 ஏக்கர் வயல்களும், வெல்லாவெளி கமநல கேந்திர  நிலையத்துக்குட்பட்ட 6 விவசாயிகளின் 15 ஏக்கர் வயல்களும், பழுகாமம் கமநல கேந்திர  நிலையத்துக்குட்பட்ட 94 விவசாயிகளின் 238.25 ஏக்கர் வயல்களும், ஆரையம்பதி கமநல கேந்திர  நிலையத்துக்குட்பட்ட 61 விவசாயிகளின் 149.5 ஏக்கர் வயல்களும்,  கல்லடி கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 137 விவசாயிகளின் 510.5 ஏக்கர் வயல்களும், மண்டபத்தடி கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 1094 விவசாயிகளின் 3,615.5 ஏக்கர் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.  

மேலும், ஆயித்தியமலை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 112 விவசாயிகளின் 310.75 ஏக்கர் வயல் நிலங்களும், கரடியனாறு கமநல கேந்திர  நிலையத்துக்குட்பட்ட 386 விவசாயிகளின் 1462 ஏக்கர் வயல்களும், ஏறாவூர் கமநல கேந்திர  நிலையத்துக்குட்பட்ட 181 விவசாயிகளின் 513 ஏக்கர் வயல்களும், வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 35 விவசாயிகளின் 121.25 ஏக்கர் வயல்களும், கிரான் கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 1,152 விவசாயிகளின் 2,437 ஏக்கர் வயல்களும், தாந்தாமலை கமநல கேந்திர  நிலையத்துக்குட்பட்ட 8 விவசாயிகளின் 35 ஏக்கர் வயல்களும், வாகரை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 750 விவசாயிகளின் 1362.75 ஏக்கர் வயல்களும், வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட 327 விவசாயிகளின் 1,089.75 ஏக்கர் வயல்களும் பாதிப்படைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .