2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

த.தே.கூ. எம்பிக்கள் மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

 மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஜெயராஜா ஆகியோரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் இந்த  உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயகக் குடியரசு அரசுக்கு எதிராக, வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பதாதைகளை ஏந்தியவாறு பொலிஸ் அனுமதி பெறாமல் வீதியில் ஊர்வலம் சென்றதாகவும் ஊர்வலத்தைக் கலைப்பதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நேரம் போதவில்லை என்றும் காத்தான்குடி பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை கைது செய்தால் மக்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினால் அவர்களை கைது செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்ட ஊர்வலமானது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன் செல்வராசா, எஸ்.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்னம், வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ஆகியோரால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  அறிய முடிந்துள்ளதாகவும் இது தொடர்பாக விளக்கமளிக்க மேற்குறிப்பிட்டவர்கள எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்புக்குமாறும் பொலிஸார் அந்த அறிக்கையில் நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் வி.இராமகமலன் இந்த அழைப்பாணையைப் பிறப்பித்துள்ளார்.


 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .