2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. வாகன விபத்தில் மாணவி பலி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரத்தியேக வகுப்புக்காக சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த மாணவி மீது  கன்ரர் ரக வாகனமொன்று மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மட்டக்களப்பு, புதிய பாலை வீதி என்னும் இடத்திலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் பற்குணம் கோகிலா என்ற மாணவியே இந்த விபத்தில் பலியானார்.

வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு  நீதிபதி சென்று பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேரில்ச் சென்று விசாரணை மேற்கொண்டார்.  சம்பவத்தை நேரில்க் கண்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் சம்பவம் தொடர்பாக சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவும் சம்பவ  இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பில் அண்மையில் பொலிஸாரின் ஆயுதம் பறித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து வீதிச் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், சந்தியில் நின்ற விசேட அதிரடிப்படையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக முச்சக்கரவண்டியை கடந்து அதிவேகமாக செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.



  (படப்பிடிப்பு:-அனுருத்திரன், எம்.எஸ்.வதனகுமார்)




 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .