2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

காலிழந்தவர்களுக்கு செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கை

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)
யுத்தம் மற்றும் நோய்களினால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டி குண்டசாலையிலுள்ள அங்கவீனர் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பரிவுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை கால்களை இழந்த அங்கவீனர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் நடவடிக்கை இடம்பெற்றது. அங்கவீனர் நிலையத்தின் முகாமையாளர் வீரரத்ன தலைமையிலான குழுவினரே செயற்கை கால்களை பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் கால்களை இழந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, ஓட்டமாவடி, கிரான், செங்கலடி, காத்தான்குடி, ஆரையம்பதி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பரிவுகளைச் சேர்ந்த 55பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டதாக அந்நிலையத்தின் முகாமையாளர் வீரரத்ன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--