2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நேரடி விவாதத்திற்கு வருமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு அழைப்பு

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நேரடி விவாதத்திற்கு வருமாறு காத்தான்குடி நகர சபை தேர்தலில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற பெயரில் காத்தான்குடி பிரதேசத்தில்  பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும் அது தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் நேரடி விதாதத்தில் ஈடுபட தாங்கள் எப்போதும் தயார் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதற்கான பதிலை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

காத்தான்குடியை மையமாக கொண்டு இயங்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த முறை இடம்பெற்ற காத்தான்குடி நகர சபை தேர்தலில் சுயேட்சை போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியதுடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X