2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து, கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் மினி பஸ்ஸுடன் மோட்டார்  சைக்கிளொன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குருக்கல் மடத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 31) கோகுலன் (வயது 23) ஆகிய இருவருமே இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆவர்.  மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .