2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி இருவர் பலி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஐதுர்சன்,ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் யானை தாக்கி ஆண்கள் இருவர் பலியாகியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

இவர்கள் இருவரும் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இவர்கள் மீது யானை தாக்கியுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றையவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர்கள் இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--