2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மட்டு. போதனா வைத்தியசாலையின் உள்வீதிகளுக்கு கொங்கிறீட் இடும் பணி ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள்வீதிகளை கொங்கிறீட் வீதிகளாக அமைக்கும் பணிகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  ஆரம்பித்து வைத்தார்.

வைத்தியசாலைகளின் வீதிகளுக்கு கொங்கிறீட் வீதிகள் அமைத்தல் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த நடவடிக்கை  ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் தெரிவித்தார்.

இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 4.4 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக 440 மீற்றர் நீளமான வீதிக்கு கொங்கிறீட் இடப்படவுள்ளதாக பொருளாதார அபவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன். ரவீந்திரன், ருத்திரமலர் ஞானபாஸ்கரன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சந்தனி பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--