2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இலவச அப்பியாசக் கொப்பிகள் விநியோகம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,  ஜிப்ரான்)

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் எட்டாயிரம் மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை வைபவரீதியாக காத்தான்குடியில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர்றஹ்மான், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.சபீல், எம்.ஐ.எம்.நசீர் உட்பட முக்கியஸ்த்தர்கள், சமய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆயிரம் மாணவர்களுக்கு இலவச அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலுமுள்ள பிரதேசங்களில் 8000 மாணவர்களுக்கு இந்த அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன. (படங்கள்:சுக்ரி)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .