2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பயணிக்கும் பெண்களுக்கு புதிய சட்டம்

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டர் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் எனும் போக்குவரத்து சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்களில்களில் பின் ஆசனங்களில் இருந்து செல்லும் பெண்கள் ஒரு பக்கம் இருந்தே இதுவரை காலமும் பயணித்து வருகின்றனர்.

தற்போது மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது போக்குவரத்து சட்ட ஒழுங்காகும். இந்த ஒழுங்கை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் மற்றும் சாரி போன்ற உடை அணிந்து செல்லும் பெண்கள் மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதற்கு சிரமப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--