2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

முதலைக்குடா கிராமத்திற்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}-ரீ.எல்.ஜவ்பர்கான்எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா கிராமத்திற்கு முதன்முறையாக மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கிராமத்திற்கான மின்விநியோகத்தை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பித்துவைத்தார்.
இதற்கென மின்சக்தி அமைச்சு 30 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது.

இதேவேளை, கொக்கட்டிச்சோலை கிராமத்தின் ஒருபகுதிக்கும் மின்விநியோகம் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இக்கிராமத்திற்கு மின்விநியோகம் ஊடாக சுமார் 300 குடும்பங்கள்  நன்மையடைவர்  என  எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--