2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

சத்துணவு திட்டம் அனைத்து கல்வி வலயங்களுக்கும் நிறுத்தப்பட்டது: அகமட் லெவ்வை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சத்துணவு வழங்கும் திட்டம் மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு மாத்திரம் நிறுத்தப்படவில்லை. இத்திட்டம் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் நிறுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெவ்வை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலும் ஏப்ரல் மாதம் முதல்  வாரத்திலிருந்து சத்துணவு நிறுத்தப்பட்டது

"கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரின் மின்னஞ்சல் அறிவித்தலுக்கமைய சத்துணவு வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பாடசாலைகளுக்கான சத்துணவு  நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. 

இது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு மாத்திரமின்றி, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கல்வி வலயங்களுக்குமான அறிவித்தலாகும்.
சத்துணவு வழங்கும் பணியை சகல பாடசாலைகளும் ஏப்ரல் முதல்; வாரத்திலிருந்து உடனடியாக நிறுத்தி, இரண்டாம் தவணை பாடசாலை ஆரம்பமாகும் தினத்திலிருந்து  மீண்டும் ஆரம்பிக்குமாறும் மேற்படி ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரின் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, எமது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலும் சத்துணவு வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பாக எந்தவொரு உணவு வழங்குநர்களும் நிலை குலைந்து போனது தொடர்பாகவோ சமைப்பதற்கு தயார் நிலையில் இருக்கும் பொழுது அறிவித்தல் கிடைத்தது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்றோ எதுவித முறைப்பாடுகளையும்; எமக்குத் தெரிவிக்கவில்லை. 

மாறாக போதிய நேர அவகாசம் இருக்கும் நிலையில் அறிவித்தல் கிடைத்தது என்றே கூறியுள்ளனர். மேலும்; இம்மாதம் 1ஆம்; 2ஆம் திகதிகளில் சத்துணவு வழங்கிய பாடசாலைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .