2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

துரைராஜா அருளேந்திரன்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: துரைராஜா அருளேந்திரன்

சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும் நவக்கிரி மேற்கை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா அருளேந்திரன் 19.10.2010 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் காலமானார்.

அன்னார் துரைராஜா காலஞ்சென்ற தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் பாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும் வசந்தியின் அன்புக்கணவரும் சஜந்தன் (பிரான்ஸ்), சுஜந்தன், லக்சனா, துஷ்ந்தன், திவ்வியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுரேந்திரன், செல்வேந்திரன், விஜியேந்திரன், அருந்தவராணி, கமலேந்திரன் (ஜேர்மனி), அருந்தவநாயகி, அருந்தவமலர், சிவஇயந்திரன், சத்தியேந்திரன் (லண்டன்), ஆகியோரின் சகோதரனும் செல்வராணி, சாரதாம்பிகை, விமலராணி, ஞானச்செல்வராணி, மகேந்திரராஜா, காலஞ்சென்ற தர்மபாலா மற்றும் முரளி தரன், ஜெயரூபா, சுகந்தினி, ஜெயந்தி (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் பாலமுரளி, கிருஸ்ணாவின் (லண்டன்) சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.10.2010 வியாழக் கிழமை பிரான்ஸில் நடைபெற்று பூதவுடல் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:மனைவி, பிள்ளைகள்.
நவக்கிரி மேற்கு, புத்தூர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .