2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள்

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன் 

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு  அமைவாக, தலவாக்கலை, லிந்துலை, நானுஓயா, நுவரெலியா, இராகலை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள், நாளை மற்றும்சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளன.

இதற்கேற்ப, கந்தப்பளை போட்ஸ்வூட் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 15 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு,  நாளை  பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, இராகலை லிடஸ்டெல் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 35 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு,  பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

நானுஓயா, உடரதல்ல மேற்பிரிவில் அமைக்கப்படவுள்ள 23 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, சனிக்கிழமை காலை 11 மணிக்கும்  லிந்துலை லெமினியர் தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 7 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  நண்பகல் 12 மணிக்கும், ஆக்ரா தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 20 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பிற்பகல் 1 மணிக்கும் மெரயா தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 20 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 2 மணிக்கும் நடைபெறவுள்ளன.
இதேவேளை, தலவாக்கலை லோகி தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 15 வீடுகள் மற்றும் அக்கரப்பத்தனை லோவர் கிரன்லி தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 25 வீடுகளுக்கான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .