Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
இலங்கை வாழ் மக்கள் அனைவரும், தத்தமது சமயம் குறித்து மாத்திரம் தெரிந்து வைத்துக்கொள்ளாமல், ஏனைய மதங்கள் குறித்தும் தெரிந்துகொண்டால், நாட்டில் நிச்சயமாக சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என, தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் கலாசாரம் மற்றும் சுற்றாடல் நிறுவனத்தின் பணிப்பாளருமான எமில் தசாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பின் குழுக் கூட்டம், ஹட்டன் இந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இஸ்லாம் மதம் தொடர்பாக விளக்கம் தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தொடர்ந்து எதிர்வரும் நாள்களில் ஏனைய மதங்கள் தொடர்பான விளக்கங்கள் இடம்பெறவுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றவர்கள், தாங்கள் தெரிந்து கொள்ளும் விடயங்களையும் விவரங்களையும் ஏனையவருக்கும் அறியத் தந்து, எமது நாட்டின் நிரந்தர சமாதானத்தில் பங்கு கொள்ள முன்வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago