2021 மார்ச் 01, திங்கட்கிழமை

அனர்த்த பாதிப்புகளுக்கு நிவாரணம்

Kogilavani   / 2017 ஜூலை 19 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளப்பெறுக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு, 500 மில்லியன் ரூபாய் செலவில் மீள குடியமர்த்துவதற்கு பொருத்தமான காணிகளை இனங்கண்டு, புதிய வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.
மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரத்தால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கையளிக்கப்பட்ட அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான ஏனைய வீடுகளுக்கு கூரைத்தகடுகளை பெற்றுக் கொடுப்பதற்கும், அனர்த்தங்களினால் அவதியுறுகின்ற தோட்டப் பிரதேசங்களை அண்டியதாக கழிவகற்றல் தொகுதிகளும் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

இதேவேளை, அவ்வாறான பகுதிகளில், நீர் வழங்கல் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும், நீர்தாங்கிகளை பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை விருத்தி செய்யப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .