2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

அனுஷாவுக்கு ரணில் அவசர அழைப்பு

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரனுக்கு ஐக்கிய தேசியக்கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனுக்கு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட ஒருவர் ஊடாகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அனுஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் களமிறங்கப் போவதாக, அனுஷா சந்திரசேகரன் அறிவிப்பு விடுத்திருந்தாலும் அவருக்கான வாய்ப்பை, மலையக மக்கள் முன்னணி வழங்கியிருக்கவில்லை.

எனினும், பிரதான அரசியல் கட்சிகள் அனுஷாவுக்கு அழைப்பு விடுத்திருந்தன. மேற்படி அழைப்புகள் தொடர்பில் அனுஷா சந்திரசேகரன் பரீசிலித்துவந்த நிலையிலேயே, தற்போது ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில், பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுமாறு ரணில் கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X